Kavacham · Murugan·Tamil
கந்த சஷ்டி கவசம்
Kanda Ṣaṣṭi Kavacham
தேவராய சுவாமிகள்
Devarāya Swāmigaḷ
கந்த சஷ்டி கவசம் முருகனின் அருளை வேண்டி உடல்–உயிர்–குடும்பத்தைக் காக்கும் துதி. ஸ்கந்த சஷ்டி நோன்பு நாட்களிலும் மாத சஷ்டியிலும் ஆடிக் கிருத்திகையிலும் காலையில் அல்லது மாலையில் ஓதப்படுகிறது. வேல் அல்லது முருகன் திருமேனியைப் பார்த்து நம்பிக்கையுடன் ஓதுங்கள்.
Kanda Ṣaṣṭi Kavacham seeks Murugan’s grace to guard body, life, and family. Recited during Skanda Ṣaṣṭī fasting days, monthly Ṣaṣṭī, and Āḍi Kṛttikā — morning or evening — facing the Vel or Murugan’s image.
1
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
Tutippōrkku valviṉaipōm, tuṉpam pōm, Neñcil patippōrkkuc celvam palittuk katittu ōṅkum, Niṣṭaiyuṅ kaikūṭum, Nimalar aruḷ kantar caṣṭi kavacan taṉai.
2
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
Amarar iṭartīra amaram purinta Kumaraṉ aṭi neñcē kuṟi.
3
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
Caṣṭṭiyai nōkka caravaṇapavaṉār Ciṣṭṭaruk kutavumceṅkatir vēlōṉ Pātamiraṇṭil paṉmaṇic cataṅkai Kītam pāṭa kiṇkiṇi yāṭa Maiyal naṭañceyyum mayilvākaṉaṉār
4
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக
Kaiyil vēlāl eṉaik kākkaveṉṟu vantu Vara vara vēlā yutaṉār varuka Varuka varuka mayilōṉ varuka Intira mutalā eṇticai pōṟṟa Mantira vaṭivēl varuka varuka
5
வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
Vācavaṉ marukā varuka varuka Nēcak kuṟamakaḷ niṉaivōṉ varuka Āṟumukam paṭaitta aiyā varuka Nīṟiṭum vēlavaṉ nittam varuka Cirakiri vēlavaṉ cīkkiram varuka
6
சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென
Carahaṇapavaṉār caṭutiyil varuka Rahaṇa pavaca rararara rarara Rihaṇa pavaca riririri ririri Viṇapava carahaṇa vīrā namō nama Nipava carahaṇa niṟaniṟa niṟeṉa
7
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
Vacara haṇapa varuka varuka Acurar kuṭikeṭutta aiyā varuka Eṉṉai āḷum iḷaiyōṉ kaiyil Paṉṉiraṇṭā yutam pāca aṅkucamum Paranta viḻikaḷ paṉṉiraṇṭilaṅka
8
விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்
Virainteṉaik kākka vēlōṉvaruka Aiyum kiliyum aṭaivuṭaṉceḷavum Uyyoḷi ceḷavum uyir aiyum kiliyum Kiliyum ceḷavum kiḷaroḷi aiyum Nilai peṟ ṟeṉmuṉ nittam oḷirum
9
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
Caṇmukam nīyum taṇiyoḷi yovvum Kuṇṭali yām civa kukaṉtiṉam varuka Āṟumukamum aṇimuṭi āṟum Nīṟiṭu neṟṟiyum nīṇṭa puruvamum Paṉṉiru kaṇṇum pavaḷac cevvāyum
10
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
Naṉṉeṟi neṟṟiyil navamaṇic cuṭṭiyum Īrāṟu ceviyil ilaku kuṇṭalamum Āṟiru tiṇpuyat taḻakiya mārpil Pal pūṣaṇamum patakkamum tarittu Naṉmaṇi pūṇṭa navaratṉa mālaiyum
11
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
Muppuri nūlum muttaṇi mārpum Ceppaḻakuṭaiya tiruvayiṟu untiyum Tuvaṇṭa maruṅkil cuṭaroḷip paṭṭum Navarattiṉam patitta naṟcīrāvum Irutoṭai aḻakum iṇaimuḻantāḷum
12
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
Tiruvaṭi yataṉil cilampoli muḻaṅka Cekakaṇa cekakaṇa cekakaṇa cekaṇa Mokamoka mokamoka mokamoka mokeṉa Nakanaka nakanaka nakanaka nakeṉa Ṭikukuṇa ṭikuṭiku ṭikukuṇa ṭikuṇa
13
ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து
Rararara rararara rararara rarara Riririri riririri riririri ririri Ṭuṭuṭuṭu ṭuṭuṭuṭu ṭuṭuṭuṭu ṭuṭuṭu Ṭakuṭaku ṭikuṭiku ṭaṅku ṭiṅkuku Vintu vintu mayilōṉ vintu
14
முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று
Muntu muntu murukavēḷ muntu Eṉṟaṉai yāḷum ērakac celva Maintaṉ vēṇṭum varamakiḻntu tavum Lālā lālā lālā vēcamum Līlā līlā līlā viṉōtaṉeṉṟu
15
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க
Uṉtiru vaṭiyai uruti yeṉṟeṇṇum Eṉtalai vaittuṉ iṇaiyaṭi kākka Eṉ uyirk kuyirām iṟaivaṉ kākka Paṉṉiru viḻiyāl pālaṉaik kākka Aṭiyēṉ vataṉam aḻakuvēl kākka
16
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
Poṭipuṉai neṟṟiyaip puṉitavēl kākka Katirvēl iraṇṭum kaṇṇiṉaik kākka Viticevi yiraṇṭum vēlavar kākka Nācikaḷiraṇṭum nalvēl kākka Pēciya vāytaṉaip peruvēl kākka
17
முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க
Muppat tirupal muṉaivēl kākka Ceppiya nāvaic cevvēl kākka Kaṉṉamiraṇṭum katirvēl kākka Eṉṉiḷaṅ kaḻuttai iṉiyavēl kākka Mārpai iratṉa vaṭivēl kākka
18
சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
Cēriḷa mulaimār tiruvēl kākka Vaṭivē lirutōḷ vaḷampeṟak kākka Piṭarika ḷiraṇṭum peruvēl kākka Aḻakuṭaṉ mutukai aruḷvēl kākka Paḻupati ṉāṟum paruvēl kākka
19
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
Veṟṟivēl vayiṟṟai viḷaṅkavē kākka Ciṟṟiṭai aḻakuṟac cevvēl kākka Nāṇ ām kayiṟṟai nalvēl kākka Āṇpeṇkuṟikaḷai ayilvēl kākka Piṭṭa miraṇṭum peruvēl kākka
20
வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
Vaṭṭak kutattai valvēl kākka Paṇaittoṭai yiraṇṭum paruvēl kākka Kaṇaikkāl muḻantāḷ katirvēl kākka Aiviral aṭiyiṇai aruḷvēl kākka Kaika ḷiraṇṭum karuṇaivēl kākka
21
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க
Muṉkaiyiraṇṭum muraṇvēl kākka Piṉkaiyiraṇṭum piṉṉavaḷ irukka Nāvil carasvati naṟṟuṇai āka Nāpik kamalam nalvēl kākka Muppāl nāṭiyai muṉai vēl kākka
22
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க
Eppoḻutum eṉai etirvēl kākka Aṭiyēṉ vacaṉam acaivuḷa nēram Kaṭukavē vantu kaṉaka vēl kākka Varum pakal taṉṉil vacciravēl kākka Aṟaiyiruḷ taṉṉil aṉaiyavēl kākka
23
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க
Ēmattil cāmattil etirvēl kākka Tāmatam nīkkic caturvēl kākka Kākka kākka kaṉakavēl kākka Nōkka nōkka noṭiyil nōkka Tākkat tākkat taṭaiyaṟat tākka
24
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
Pārkkap pārkkap pāvam poṭipaṭa Pilli cūṉiyam perumpakai akala Valla pūtam valāṣṭikap pēykaḷ Allaṟ paṭuttum aṭaṅkā muṉiyum Piḷḷaikaḷ tiṉṉum puḻakkaṭai muṉiyum
25
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்
Koḷḷivāyp pēykaḷum kuṟaḷaip pēykaḷum Peṇkaḷait toṭarum piramarāṭcatarum Aṭiyaṉaik kaṇṭāl alaṟikkalaṅkiṭa Iricik kāṭṭēri ittuṉpa cēṉaiyum Elliṉum iruṭṭiṉum etirpaṭum aṇṇarum
26
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும்
Kaṉapūcai koḷḷum kāḷiyōṭaṉē varum Viṭṭāṅ kārarum mikupala pēykaḷum Taṇṭiyak kārarum caṇṭāḷarkaḷum Eṉpeyar collavum iṭiviḻuntōṭiṭa Āṉai aṭiyiṉil arumpāvaikaḷum
27
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
Pūṉai mayirum piḷḷaikaḷ eṉpum Nakamum mayirum nīṇmuṭi maṇṭaiyum Pāvaikaḷuṭaṉē palakalacattuṭaṉ Maṉaiyiṟ putaitta vañcaṉai taṉaiyum Oṭṭiyac cerukkum oṭṭiyap pāvaiyum
28
காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட
Kācum paṇamum kāvuṭaṉ cōṟum Ōtum añcaṉamum oruvaḻip pōkkum Aṭiyaṉaik kaṇṭāl alaintu kulaintiṭa Māṟṟār vañcakar vantu vaṇaṅkiṭa Kāla tūtāḷ eṉaikkaṇṭāṟ kalaṅkiṭa
29
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய
Añci naṭuṅkiṭa araṇṭu puraṇṭiṭa Vāyviṭṭalaṟi matikeṭṭōṭa Paṭiyiṉil muṭṭa pācakka yiṟṟāl Kaṭṭuṭaṉ aṅkam kataṟiṭak kaṭṭu Kaṭṭi uruṭṭu kālkai muṟiya
30
கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால்
Kaṭṭu kaṭṭu kataṟiṭak kaṭṭu Muṭṭu muṭṭu muḻikaḷ pituṅkiṭa Cekku cekku cetil cetilāka Cokku cokkuc cūrppakaic cokku Kuttu kuttu kūrvaṭi vēlāl
31
பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
Paṟṟu paṟṟu pakalavaṉ taṇaleri Taṇaleri taṇaleri taṇalatu vāka Viṭu viṭu vēlai veruṇṭatu vōṭa Puliyum nariyum puṉṉari nāyum Eliyum karaṭiyum iṉittoṭarn tōṭa
32
தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
Tēḷum pāmpum ceyyāṉ pūrāṉ Kaṭiviṭa viṣaṅkaḷ kaṭittuya raṅkam Ēṟiya viṣaṅkaḷ eḷitiṉil iṟaṅka Oḷippuñ cuḷukkum orutalai nōyum Vātam cayittiyam valippup pittam
33
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும்
Cūlaicayaṅ kuṉmam cokkuc ciraṅku Kuṭaiccal cilanti kuṭalvip piruti Pakkap piḷavai paṭar toṭai vāḻai Kaṭuvaṉ paṭuvaṉ kaittāḷ cilanti Paṟkuttu araṇai paruarai yāppum
34
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
Ellāp piṇiyum entaṉaik kaṇṭāl Nillā tōṭa nī eṉak karuḷvāy Īrēḻ ulakamum eṉakku uṟavāka Āṇum peṇṇum aṉaivarum eṉakkā Maṇṇā ḷaracarum makiḻntuṟa vākavum
35
உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக்
Uṉṉait tutikka uṉ tirunāmam Carahaṇa pavaṉē cailoḷi pavaṉē Tiripura pavaṉē tikaḻoḷi pavaṉē Paripura pavaṉē pavamoḷi pavaṉē Aritiru marukā amarā patiyaik
36
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா
Kāttut tēvarkaḷ kaṭuñciṟai viṭuttāy Kantā kukaṉē katirvēlavaṉē Kārttikai maintā kaṭampā kaṭampaṉē Iṭumpaṉai ēṟṟa iṉiyavēl murukā Taṇikā calaṉē caṅkaraṉ putalvā
37
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே
Katirkā mattuṟai katirvēl murukā Paḻanip pativāḻ pāla kumārā Āviṉaṉ kuṭivāḻ aḻakiya vēlā Centiṉmā malaiyuṟum ceṅkalvarāyā Camarā purivāḻ caṇmukat taracē
38
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
Kārār kuḻalāḷ kalaimakaḷ naṉṟāy Eṉnā irukka yāṉ uṉaip pāṭa Eṉaittoṭarn tirukkum entai murukaṉaip Pāṭiṉēṉ āṭiṉēṉ paravacamāka Āṭiṉēṉ nāṭiṉēṉ āviṉaṉ pūtiyai
39
நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார்
Nēca muṭaṉyāṉ neṟṟiyil aṇiyap Pāca viṉaikaḷ paṟṟatu nīṅki Uṉpatam peṟavē uṉṉaruḷāka Aṉpuṭaṉ irakṣi aṉṉamuñ coṉṉamum Metta met tāka vēlā yutaṉār
40
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
Cittipeṟ ṟaṭiyēṉ ciṟappuṭaṉ vāḻka Vāḻka vāḻka mayilōṉ vāḻka Vāḻka vāḻka vaṭivēl vāḻka Vāḻka vāḻka malaikkuru vāḻka Vāḻka vāḻka malaikkuṟa makaḷuṭaṉ
41
வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
Vāḻka vāḻka vāraṇattuvacam Vāḻka vāḻka eṉ vaṟumaikaḷ nīṅka Ettaṉai kuṟaikaḷ ettaṉai piḻaikaḷ Ettaṉai yaṭiyēṉ ettaṉai ceytāl Peṟṟavaṉ nī kuru poṟuppatu uṉ kaṭaṉ
42
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
Peṟṟavaḷkuṟamakaḷ peṟṟavaḷāmē Piḷḷaiyeṉ ṟaṉpāy piriya maḷittu Maintaṉeṉ mītu uṉ maṉamakiḻn taruḷit Tañcameṉ ṟaṭiyār taḻaittiṭa aruḷ cey Kantar caṣṭi kavacam virumpiya
43
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
Pālaṉ tēva rāyaṉ pakarntataik Kālaiyil mālaiyil karuttuṭaṉ nāḷum Ācā rattuṭaṉ aṅkan tulakki Nēca muṭaṉoru niṉaivatu vāki Kantar caṣṭik kavacam itaṉaic
44
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்
Cintai kalaṅkātu tiyāṉippavarkaḷ Orunāḷ muppat tāṟuruk koṇṭu Ōtiyē cepittu ukantu nīṟaṇiya Aṣṭatik kuḷḷōr aṭaṅkalum vacamāyt Ticaimaṉṉa reṇmar ceyalatu aruḷuvar
45
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை
Māṟṟala rellām vantu vaṇaṅkuvar Navakōḷ makiḻntu naṉmai yaḷittiṭum Navamata ṉeṉavum nalleḻil peṟuvar Enta nāḷumī reṭṭā vāḻvar Kantarkai vēlām kavacat taṭiyai
46
வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி
Vaḻiyāṟ kāṇa meyyāy viḷaṅkum Viḻiyāṟ kāṇa veruṇṭiṭum pēykaḷ Pollā tavaraip poṭip poṭi yākkum Nallōr niṉaivil naṭaṉam puriyum Carva catturu caṅkā rattaṭi
47
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
Aṟinteṉa tuḷḷam aṣṭalaṭ cumikaḷil Vīralaṭ cumikku viruntuṇa vākac Cūrapatmāvait tuṇittakai yataṉāl Irupat tēḻvarkku uvantamu taḷitta Kuruparaṉ paḻanik kuṉṟiṉi lirukkum
48
சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி
Ciṉṉak kuḻantai cēvaṭi pōṟṟi Eṉaittaṭut tāṭkoḷa eṉṟaṉa tuḷḷam Mēviya vaṭivuṟum vēlava pōṟṟi Tēvarkaḷ cēṉā patiyē pōṟṟi Kuṟamakaḷ maṉamakiḻ kōvē pōṟṟi
49
திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே
Tiṟamiku tivviya tēkā pōṟṟi Iṭumpā yutaṉē iṭumpā pōṟṟi Kaṭampā pōṟṟi kantā pōṟṟi Veṭci puṉaiyum vēḷē pōṟṟi Uyarkiri kaṉaka capaikku ōraracē
50
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
Mayilnaṭa miṭuvōy malar aṭi caraṇam Caraṇam caraṇam carahaṇa pava ōm Caraṇam caraṇam caṇmukā caraṇam.
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
Śrī Kandar Ṣaṣṭi Kavacam muṟṟiṟṟu.
தொடர்புடைய விழா & விரதம்
Linked festivals & vrata
தொடர்புடைய விழா & விரதம்
Linked festivals & vrata